வியாழன், 20 நவம்பர், 2025

 உன்றிஸ்வரர் ஆலயம்  திருவள்ளூர்

  

                              உன்றிஸ்வரர் ஆலயம்  திருவள்ளூர்.


                                 



மூலவர் பெயர் : ஊன்றீஸ்வரர், ஆதாரதண்டேஸ்வரர்.


உற்சவர் பெயர் : சோமாஸ்கந்தர்.


அம்மன் / தாயார் : மின்னோளி அம்பாள்தடித்கௌரி.


தல விருட்சம் : இலந்தை.


தீர்த்தம் : குசஸ்தலை நதி, கைலாய தீர்த்தம். 


புராண பெயர் : பழம்பதி,திருவெண்பாக்கம்.


ஊர் : பூண்டி. 


 மாவட்டம் : திருவள்ளூர்.

 
மாநிலம் தமிழ்நாடு. 


தேவரா பாடல் பெற்ற  276 ஸ்தலகளில் இத்தலம் 250 பாடல் பெற்ற ஸ்தலம்.

தொண்டை நாட்டு பாடல் பெற்ற ( 31 )ஸ்தலகளில்  இத்தலம் 17 வது ஸ்தலம்..


தேவாரப்பதிகம்.


பிழையளன பொறுத்திடுவர் என்றடி யேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய்

குழைவிரவு வடிகாதா கோயிலுளாயே என்ன உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர். என்றானே. 


பாடியவர் சுந்தரர்.



இத்தலத்தின் முக்கிய செய்தி : 


இந்த ஆலயத்தின் வரலாறு பார்ப்பதுக்கு முன் இத்தலத்தின் முக்கியமான பதிவுகளை பார்ப்போம்.ஆம் சிவனை நோக்கி சுந்தரர் பாடி தேவராப் பதிகம் பெற்றக் கோயிலும் இது இல்லை 11 ஆம் நுற்றாண்டில் இரசாராசான்  காலத்திய  கட்டப்பட்ட கோயிலும் இது இல்லை. சற்று விரிவாக பார்ப்போம் இந்த கோயில் இருந்த இடமானது திருவிளம்பூதூர் எனும் ஊர். இந்த ஊர் குசஸ்தலையாற்றின் கரையறோம் இருந்தது.திருவிளம்பூதூர் என்றால் பத்தி காரண்யம் என்று பொருள் அதாவது ( இலந்தை மரம் சுழ்ந்த காடு )என்ற இடம். இக் கோயிலை 11 ஆம் நுற்றாண்டில் இரசாராசான் காலத்து ஆலயம் என்றும் இந்த ஆலயம் பூண்டி ஏரிக்குள் மூழ்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது . அதாவது அப்போது இருந்த அரசாங்கம் 1942 ல் சென்னையின் குடிநீர் தேவைக்காக நிலம் தேவைப்பட்டது மற்றும் மிக பெரிய அணைக்கட்டவும் முடிவு செய்தது ( பூண்டி அணை ) .மிக பெரிய ஆய்வுக்கு பின் திருவிளம்பூதூர் எனும் இந்த ஊரும் அடங்கிற்று .அப்போதய அறநிலைத்துறை அமைச்சராக இருந்த திரு பக்தவச்சலம் மற்றும் அறநிலை துறை ஆணையர் திரு உத்தண்டராமன் பிள்ளை ஆகியோரின் முயற்சியால் அணைக்கட்டினால் இந்த ஆலயம் மூழ்கிவிடும் என்றும் ஆலயத்தை இங்கிருந்து அகற்றி இப்போது இருக்கும் பூண்டி ஊரின் மைய பகுதியில் வைத்து 05.07.1968 ல் புதிய பூண்டி உண்டிரீஸ்வரர் கோயிலாக கட்டி நிறைவு பெற்றது .அன்றை தினமே இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷகம் செய்யப்பட்டது .இந்த செய்தியை இப்போது இருக்கும் புதிய பூண்டி உண்டிரீஸ்வரர் கோயில் அம்பாள் சன்னதிக்கு எதிர் வாசலில் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது 




                                     



தல வரலாறு :


திருவள்ளூரில் அமைந்து இருக்கும் இந்த உண்டிரீஸ்வரர் ஆலயத்திற்கு சுந்தரர் தேவார பாடல் பதிகம் பாடியுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று .அப்படிப்பட்ட சுந்தரருக்கும் சிவனுக்கும் நடந்த திருவிளையாடல் தான் இந்த கோயிலின் முழு வரலாறு . சுந்தரர் திருவையாறில்வையாரை மணந்து கொண்டு வாழ்ந்து வந்தார் .ஒரு முறை சிவ சேவை செய்வதற்காக திருவொற்றியூர் வந்தார் சுந்தரர் . அப்போது இதே பகுதில் சிவ சேவை செய்து கொண்டு இருந்த சங்கிலியார் பெண் இருந்து வந்தார் . சுந்தரர் சங்கிலியாரை மணந்து கொள்ள ஆசை என்று சொன்னார் சங்கிலியாரும் சுந்தரர் சொன்னதற்கு சம்மதம் தெரிவித்தார் . சுந்தரரும் சிவனை சாட்சியாக வைத்து சங்கிலியாரை மணம் முடித்து அவளை பிரியமாட்டேன் என்று சிவன் முன் சத்தியம் செய்து விட்டு சுந்தரர் சங்கிலியாரை மணந்து கொண்டார் . ஆனால் சுந்தரர் சிவனுக்கு தான் செய்து கொடுத்த சத்தியத்தை மறந்து விட்டு தான் மணந்து கொண்ட சங்கிலியரையும் விட்டு பிரியமாட்டேன் என்ற சத்தியத்தையும் மீறி திருவொற்றியூரில் இருந்து திருவாரூருக்கு நோக்கி செல்ல தொடங்கினர். சிவனுக்கு சுந்தரர் தனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறிவிட்டார் என்றவுடன் கடும் கோபம் வந்தது உடனே சுந்தரர் திருவொற்றியூர் எல்லையை தாண்டும் முன் சுந்தரரின் இரு கண்களையும் சிவன் பறித்து விடுகிறரர். சுந்தரர் தன் இரு கண்களும் பறிபோனதற்கு தான் சிவனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால்தான் என்று உணர்ந்து கொண்டார் . உடனே சிவன் இடம் தான் உங்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறிவிட்டேன் என்று நான் செய்தது தவறு தன்னை மன்னித்து தனக்கு கண் கொடுக்குமாறு சுந்தரர் சிவனிடம் வேண்டுகிறரர் . ஆனால் கோபம் கொண்ட சிவன் தான் உங்களுக்கு கண் கொடுக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார் . சுந்தரர் தன் கண் பறிபோன வருத்தத்தில் திருவொற்றியூரில் இருந்து திருவாரூர் நோக்கி புறப்பட்டு செல்கிறார் .அப்போது செல்லும் வழியில் தட்டுத்தடுமாறி இந்த உண்டிரீஸ்வரர் ஆலயத்திற்கு வருகிறார் மறுபடியும் சிவனிடம் தனக்கு கண் தரும்படி வேண்டுகிறார் ஆனால் சிவன் அமைதியாகவே இருந்தார் .சுந்தரர் பரம்பொருளே எனக்கு கண் தாருங்கள் நான் செய்தது தவறு எனக்கு மன்னிப்பே கிடையாதா என்று மனம் உருகிவேண்டுகிறார் . சிவன் சுந்தரர் நிலை கண்டு சற்று மனம் உருகி அவருக்கு ஒரு ஊன்றுகோலை தருகிறார் . நான் உங்களிடம் கண் கேட்டால் நீங்கள் ஊன்றுகோலை தருகிறீர்கள் இது என்ன சோதனை இந்த ஊன்றுகோலை வைத்து கொண்டு எப்படி நான் செல்வது நீங்கள் இங்கு தான் இருக்கிறீர்கள் என்றால் தனக்கு கண் தரவேண்டும் கோபம் கொள்கிறார் சுந்தரர் . ஆனால் சிவனோ அவருக்கு இறுதிவரை கண் தரவில்லை கோபம் கொண்ட சுந்தரர் சிவன் தனக்கு கொடுத்த ஊன்றுகோலை தூக்கி வீசிவிட்டு காஞ்சிபுரம் நோக்கி தன் யாத்திரை செல்கிறார் சுந்தரர் வீசிய ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டு நந்தியின் கொம்பு ஒடிந்து விடுகிறது .

                              


மேலே உள்ள புகைப்படத்தை சற்று உற்று பார்த்தால் தெரியும் சுந்தரர் வீசி ஊன்றுகோல் பட்டு நந்தியின் கொம்பு உடைந்த காட்சி தெரியும் .





                        
     

மின்னொளி அம்பாள்



சுந்தரரின் இந்த நிலையை கண்ட அம்பாள் அவருக்கு வழிகாட்ட உதவி செய்ய கிளம்பினாள் . ஆனால் சிவன் செல்ல வேண்டாம் என்று தடுத்துவிட்டார் அவர் எனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறிவிட்டார் என்று அம்பாள் இடம் சொன்னார். நீங்கள் அவருக்கு கண் தர வேண்டாம் என்னால் முடிந்த உதவி செய்கிறேன் என்று சொன்னார் .அம்பாள் சுந்தரரிடம் சென்று நீங்கள் செய்தது தவறுதான் நிச்சயம் உங்களுக்கு சிவன் கண் தருவார் இதனால் நீங்கள் மனம் வருந்த வேண்டாம் மனிதர்கள் தவறு செய்வது இயல்பு தான் என்று அவரை சாந்தபடுத்தினர்.நீங்கள் யாத்திரை செல்லுங்கள் நான் உங்களுக்கு மின்னொளில் வழி காட்டுகிறேன் இந்த மின்னொளி வெளிச்சத்தில் உங்கள் யாத்திரை தொடர்ந்து செல்லுங்கள் என்று அம்பாள் சொன்னார் .அம்பாள் சொன்னதை ஏற்றுக்கொண்டு சுந்தரர் திருவாரூர் நோக்கி புறப்பட்டார் .மின்னொளியில் சுந்தரர்க்கு காட்சி கொடுத்து வழி காட்டியதால் இவருக்கு மின்னொளி அம்பாள் என்று பெயர் வந்தது , அது மட்டுமின்றி சுந்தரரிடம் கனிவாக பேசி சாந்த படுத்தியதால் இவருக்கு கனிவாய்மொழிநாயகி என்ற பெயரும் பெற்றார் .




                                 



                                 



                                 


மேலே உள்ள புகைப்படத்தை சற்று உற்று பார்த்தால் உங்களுக்கு தெரியும் ( ராசராசன் கட்டிய கல் துணுக்கும் இப்போது இருக்கும் கோயில் கல் துணுக்கும் உள்ள வித்தியாசம் ) கோயிலில் இருந்து  டுக்கப்பட்ட கல் தூணும் அதன் பிறகு 1942 சென்னை குடிநீர் தேவைக்கா கோயில் அங்கிருந்து அகற்ற பட்டு 05.07.1962 ல் புதிதாக கட்டப்பட்ட கோயிலில் அதே கல் தூண் நிறுவப்பட்டவுள்ள புகைப்படம் . பூண்டி ஏரிக்குள் மூழ்கிய கோயிலில் இருந்து மொத்தம் 11 கல் தூண்கள் எடுக்கப்பட்டு மற்றும் இரண்டு மீன் சின்னம் பொறித்த கல் பாறைகள் இந்த கோயிலில் நிறுவப்ட்டுள்ளது.

 


63 நாயன்மார்கள் சிலை



6 முகங்களுடன் முருகன் சிலை


( தெற்கு பார்த்த ) காலபைரவர் எட்டு கைகளுடன் தனி பிரகாரம்




மற்ற பிரகாரங்கள்



சிறப்பம்சம் :


இந்த உன்றிஸ்வரர் கோயிலில் சிவன் கிழக்கு பார்த்த படி சுயம்பு லிங்கமமாக அருள் பாலிக்கிறார் .இங்கே சிவனுக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் மட்டும் சற்று எந்த சிவன் கோயிலிலும் இல்லாமல் வட மாலை சாற்றி வழிபடுகின்றனர் .


பிராத்தனை :

திருமண தடை உள்ளவர்கள் மற்றும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இந்த உன்றிஸ்வரர் கோயிலில் இருக்கும் சிவனுக்கும் அம்பாளுக்கும் தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணதடை மற்றும் கண் பார்வை நிவர்த்தி ஆகும் என்று சொல்லப்படுகிறது .



கோயில் திறக்கும் நேரம் :

காலை . 6.00 முதல் 11.00 வரை

மலை . 4.00 முதல் இரவு 8.00 வரை


முகவரி :


அருள்மிகு உன்றிஸ்வரர் திருக்கோயில் பூண்டி : 602023 .

திருவள்ளூர் மாவட்டம் .


தொண்டை நாடு தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் மொத்தம் 31 கோயில்கள்


( சென்னை . செங்கல்பட்டு . திருவள்ளூர் . காஞ்சிபுரம் . வேலூர் . திருவண்ணாமலை . விழுப்புரம் )


இந்த ஆலயங்களுக்கு நீங்கள் செல்ல விருப்பினால் எங்களை தொடர்பு கொள்ளவும் ; 6383127357








 


செவ்வாய், 9 செப்டம்பர், 2025

திருப்பாச்சூர் வாசிஸ்வரர்

             திருப்பாச்சூர் வாசிஸ்வரர்.


        ஆலயத்தின் முகப்பு தோற்றம் 

திருப்பாச்சூர் வாசிஸ்வரர்  ஆலயம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துஉள்ளது. 1500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தை அதாவது சுமார்  7 ஆம் நுர்ட்ராண்டில் கரிகாலன் சோழன் மன்னன் கட்டியதாக தேவரா நூல்களில் குறிப்பிப்பட்டுவுள்ளது. அப்பர், சுந்தரர்,சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவரா  பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்.

இங்கு உள்ள  மூலவர்  பெயர்  : வாசிஸ்வரர் 
மூலவர்க்கு மற்றோரு பெயர்கள் ( வாசிஸ்வரர், பசுபதீசுவரர், பாசுரர்நாதர் ) என்றும் அழைக்கப்படுகிறார்.

அம்பாள்  பெயர் : தங்காதலி .
மற்றோரு பெயர்கள் ( தம் காதலி, பசுபதி நாயகி,மோகனம்பாள்,பனை  முலை நாச்சியார்) போன்ற பெயர்களை கொண்டும்  திகழ்கிரார்.


தேவாரம் பாடல்

நாறு  கொன்றையும் நாகமும் திங்களும் ஆறும் செஞ்சடை வைத்த அழகானர் காரு  கண்டத்தர் கையொதோர் 


தேவரா பாடல் பெற்ற 276  ஸ்தலங்களில் இந்த ஆலயம் 249 வது பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்.தொண்டை நாட்டு தேவரா பாடல் பெற்ற ஸ்தலங்களில் இந்த திருப்பாச்சூர் ஆலயம் 16 வது பாடல் பெற்ற ஸ்தலமகா இருக்கிறது.

       ஆலயத்தின் இன்னொரு முகப்பு      தோற்றம் 

இந்த ஆலயத்தின்  

தீர்த்தம் : சோம  தீர்த்தம். மங்கள தீர்த்தம் 
ஸ்தல விருட்சம் : வன்னிய மரம். அதாவது மூங்கில் மரம்.


கோயில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு பல பெயர்கள் உண்டு அதிலும் அம்பாள் பெயர்   (தங் காதலி)   என்பதால் தங்கதாலிபுரம் என்றும் புராண காலங்களில் மாயாபுரி,மாணிக்கபுரி,அபயபுரம் மற்றும் சோழபுரம் என்றும் அழைக்கப்படுவுள்ளது.



தல வரலாறு.

பல்லாண்டு முன்பு இத்தலம் இருக்கும் இடமானது மூங்கில் மரம் சுழ்ந்த வனமாக இருந்தது. இடையன் பசுகளை அழைத்துக்கொண்டு மெயிச்சலுக்கு சென்றான். அப்போது மேயிச்சலுக்கு வந்த பசுகளில் ஓன்று மட்டும் தனியாக ஒரு மேட்டில் மீது  அடிகடி தன் பாலை சுறந்து கொண்டுருந்தது இதை பார்த்த மாடு மெயிக்கும் இடையன் என்ன செய்வது என்று தெரியாமல் ஆட்சிரியரத்துடன் பார்த்தான். அப்போது இந்த இடத்தைஆட்சி செய்த மன்னன் இடம் இதை செயலை தெரிவித்தான்.மன்னன் மறு நாள் தன் காவலர்களை அனுப்பி அந்த இடத்தை ஆய்வு செய்துவிட்டு அந்த தொண்டு மாறு உத்தரவு இட்டான். காவலர்கள் வாசி என்ற கருவியை பயன்படுத்தி அந்த மூங்கில் மரம் நிறைந்த இடத்தை வெட்டினார்கள்.அப்போது பூமிக்கு அடியில் ரத்தம் வெளிப்பட்டது. அங்கே சிவன் சுயம்பு லிங்கமாக இருந்தார்.அதிர்ந்த மன்னன் மற்றும் காவலர்கள் பயந்து போய் அரண்மனைக்கு திரும்பி விட்டான்.

பாம்பை கண்டு மன்னன் பயப்படும் காட்சி இந்த கோயிலின் பின்புறம் உள்ள ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டுவுள்ளது

இந்த செயலை கண்ட மன்னனின் எதிரிகள் மன்னனை கொள்ள ஒரு பானையில் பாம்பு ஒன்றை வைத்து அந்த பானையை  பரிசு பொருளாக அரண்மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பானையை திறக்க பார்க்க மன்னன் அங்கு வந்தான் உடனே அங்கு வந்த ஒரு பாம்பாட்டி மன்னனிடம் இருந்து அந்த பானையை திறந்து அதில் இருந்த பாம்பை பிடித்து எந்த ஒரு காரணம் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டார். 
      இந்த மூங்கில் மரத்தில் தான்  சிவ           பெருமான் சுயம்புவாக        எழுந்துருளினார். 5000 வருடம் 

மறுநாள் அதிகாலை வேலையில் மன்னன் அறையில் ஒரு அசிறி ஒலித்தது நானே பாம்பட்டியாக வந்ததும் மற்றும் மூங்கில் காட்டில்  நானே சுயம்பு லிங்கமா எழுதுருளியதும் என்று சிவன் உணர்த்தினார்.உடனே மன்னன் இந்த இடத்தில் ஆலயம் ஓன்று எழுப்பினான். வாசி என்ற கருவியால் வெட்டப்பட்ட லிங்கம் என்பதால் இவருக்கு வாசிஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

புராண வரலாறு

படைப்பு கடவுளான பிரம்மா தன் வேத நூல்களை பத்திரமாக ஒரு இடத்தில் வைத்து இருந்தார்.மது கைடபர் என்ற இரு அசுரர்கள் பிரம்மாவிடம் இருந்த அந்த வேத நூலினை கைப்பற்றி கடலுக்கு அடியில் மறைத்து வைத்தவிட்டனர்.தன் படைப்பு தொழிலை செய்ய முடியவில்லை என்று மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார். உடனே மகாவிஷ்ணு  மத்ஸ்ய மீன் அவதாரம் எடுத்து இரு அசுரர்களை அழித்து வேத நூல்களை மீட்டு வந்தார். இதனால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க சிவனை நோக்கி தவம் செய்தார் அப்போது சிவபெருமான் பூலோகத்தில் இந்த ஆலயத்தில் தன்னை வழிபட்டு வந்தால் தோஷம் நீங்க பெறலாம் என்றார். அதன் படி மஹாவிஷ்ணு இத்தலம் வந்து இங்கு உள்ள புனிதநீரில் நிராடி தொடர்ந்து சிவனை வழி பட்டு வர தோஷம் நீங்க பெற்றார்.


ஒரு முறை பார்வதி தேவி தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவன் பெருமான் இடம் சொல்லாமல் சென்றதால்  கோபம் கொண்ட ஈசன் பார்வதி தேவியை பூலோகத்தில் சாதாரண பெண்ணாக பிறக்கும் படி சபித்தார் அதன் படி பார்வதி தேவி பூலோகத்தில் 
சாதாரண பெண்ணாக பிறந்தார். தான் செய்த தவறை எண்ணி மனம் உருகி சிவனை நினைத்து இந்த திருப்பாச்சூர் தலத்திற்கு வந்து தவம் செய்தால் அப்போது பார்வதி தேவின் தவத்தில் மகிழ்ந்த ஈசன் பார்வதி தேவியை அன்போடு தங் காதலியே என்று அழைத்தார். அதாவது (பிரியமானவேளே ) என்று அர்த்தம். அம்பாள் வந்து தவம் செய்த மட்டும் அல்லாமல்  சிவன் பார்வதி தேவியை அழைத்த அதே பெயரால் இந்த இடத்திற்கு 
தங் காதலிபுறம் என்று பெயர் வந்தது.


          தங் காதலி அம்பாள் சன்னதி 


                        விநாயகர் சபை 

புராண காலத்தில் ஒரு முறை சிவ பெருமான் திரிப்புர்ந்தகளை அழிக்க புறப்பட்டு சென்றார் அப்போது முழு முதல் கடவுள் ஆன விநாயகரை வழிபடாமல் சென்றதால் அவர் செல்லும் வழியில் அவர் சென்ற தேர் சக்கரம் முறிந்தது விநாயகர் தம்மை வணங்காமல் சென்றாதனால் என்று உடனே ஒரு விநாயகர் சபை அமைத்து சிவ பெருமானிடம் விசாரணை செய்தார். அந்த நிகழ்வுவின்படி இந்த திருப்பாச்சூர் ஆலயத்தில் 11 விநாயகர்கள் இருக்கும் படி ஒரு விநாயகர் சபை அமைந்துவுள்ளது.இந்த ஏகாதச  விநாயகர் வழிபாடு மிகுந்த பலன்அளிக்கக்கூடியது என்று வரலாறு கூறுகிறது.

நமக்கெல்லாம் தெரிந்த திருப்பதி ஏழுமழையான் வெங்கடாசலபதி தன் திருமணத்திற்க்காக குபேரனிடம் கடன் பெற்றரர். அந்த கடனை அடைக்க வெங்கடாசலபதி எவ்வளோ  முயற்சிசெய்தார் ஆனால் அவர் பெற்ற கடனை அடைக்க முடியவில்லை. இதற்கு காரணம் என்ன வென்று தெரிந்து கொள்ள  சிவபெருமானை வழிபட்டார் அப்போது ஈசன் அவர் முன் தோன்றி திருமணம் முடிந்து எல்லோரும் மணமக்களை 16 ம் பெற்று பேரு வாழ்வு வாழ்க என்று சொல்வார்கள். 16 என்பது 16 வகையனா செல்வங்கள் ( 1.புகழ்.2.கல்வி. 3.வலிமை. 4.வெற்றி. 5.நன் மக்கள். 6.பொன். 7.நெல். 8.நல் விதி. 9.நுகர்ச்சி. 10.அறிவு 11.அழகு. 12.பெருமை. 13.இனிபை. 14.துணிபு . 15.நோயின்மை. 16.நீண்ட ஆயூள்.) இப்படி பட்ட 16 வகை செல்வங்களை நீங்கள் மச்ச அவதாரம் எடுத்து அசுரர்களை அளித்து போது உங்களுக்கு தோஷம் எற்பட்டு இந்த 16 செல்வங்களில் 11 வகை செல்வங்களை நீங்கள் இழந்துவிட்டிர்கள்.நீங்கள் திருப்பாச்சூர் ஆலயம் சென்று அங்குவுள்ள விநாயகர் சபையில் இருக்கும் வலம்புரி விநாயகருக்கு 11 தேங்காய்  தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் தொடுக்கப்பட்ட மாலை,  அருகம்புல் மாலை மற்றும் 11 நெய் தீபம் ஏற்றி வழிபாட்டால் நீங்கள் இழந்த அந்த 11 வகை செல்வங்கள் திரும்ப கிடைக்கவும் நீங்கள் பெற்ற கடனை அடைப்பதற்கான  வழியும் பிறக்கும் என்றார்.அதன் அடிப்படையில் வெங்கடாசலபதி இந்த திருப்பாச்சூர் ஆலயம் வந்து இங்கு உள்ள விநாயகர் சபையில் வழிபாடு மேற்கொண்டு அவர் வாங்கிய கடனை அடைக்க தீர்வும் கண்டராம். மற்றும் அவர் இழந்த 11 செல்வங்களையும் திரும்ப பெற்றார்.அப்படி பட்ட திருப்பதி வெங்கடாசலபதி வந்து வழி பட்ட ஸ்தலம் இந்த திருப்பாச்சூர் ஆலயம். பக்தர்களும் தாங்கள் வாங்கிய கடனை அடைக்க வழி பிறக்க இங்கு வந்து இந்த விநாயகர் சபையில் இருக்கும் வலம்புரி விநாயகரை வழிபட்டால் நிச்சயம் நல்ல பலன் அளிக்கும் என்று சொல்கிறாராகள்.

தாழம்பூ பூஜை.


ஒரு முறை தாழம்பூ சிவன் தலையை கண்டதாக பொய் சொன்னது  எதற்காக என்றால் ( பிரம்மனுக்காக ).
அதனால் சிவன் தன் பூஜையில் ஒதுக்கி வைத்துவிட்டார்.தாழம்பூ தன்னை மன்னித்து ஏற்று கொள்ளவேண்டும் என்று பரிகாரம் வேண்டவே சிவன் தாழம்பூ மன்னித்து தன் சிவராத்திரி பூஜை நாளில் மட்டும் பயன்படும்படி வரம் அளித்தார். அதன் அடிப்படையில் சிவராத்திரி நாளில் மட்டும் இக்கோயிலில் தாழம்பூவை சிவன் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர். இந்த நாளில் சிவனை வணகினால் நமக்கு பொய் சொல்லும் குணமும் நம்முடைய ஆணவம் மறையும் சொல்கிறார்கள்.

சொர்ணாகளி.



இந்த ஆலயம் இருக்கும் இடத்தில் முன்பு ஒரு காலத்தில் குறும்பன் என்ற சிற்றரசன் ஆச்சி செய்து வந்தான். அப்போது சோழ மன்னன் ஒருவன் அவன் மீது படைஎடுத்து போறிட்டு அவனிடம் வரியை வாங்க வந்தான்.காளி பக்த ஆன குறும்பன் காளியை ஏவி விட்டு சோழ மன்னன் படைகலை விரட்டி அடித்தான். சோழ மன்னன் போரில் திகைத்து நீற்றான் அப்போது சிவன்னிடம் தனக்கு உதவும் படி தவம் செய்தான் சிவன் அவனுக்கு நந்தியை அனுப்பி காளி இடம் போறிட்டு சோழ மண்ணனுக்கு உதவமாறு உத்தரவு இட்டார்.. அதன் படி பூலோகம் வந்த நந்தி காலியுடன் போறிட்டு வெற்றி பெற்றது. அது மட்டும் இல்லாமல் காளியின் காலில் பொன் சங்கிளி போட்டு கட்டுபடுத்தினார். பின் சோழ மன்னன் இப் பகுதியை கைப்பற்றினான். இன்றும் காளின் காளியில் அந்த பொன் சங்கிலி இருப்பதை நாம் பார்க்கலாம்.இந்த சொர்ணகாளி அம்மனுக்கு பௌர்ணமி தோறும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

       நால்வர்கள் உடை சிலை அவர்கள்                  பாடிய பதிகம் கால்லில் செதுக்கப்பட்டுவுலது.


                        சப்த கன்னிகள்


                 தங்கட்சிணாமூர்த்தி
    நால்வர்கள் சிலை கோயில் உள்ளே

யானை சிவனுக்கு தண்ணீரில் அபிஷேகம் செய்யும் காட்சி 

மஹாகவிஷ்ணு தவம் செய்யும்        
 காட்சி

அழிந்து வரும் நிலையில் இருக்கும் மண்டபம்


ஆலயம் செல்லும் வழி : திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 3 கி மு மிட்டர்.

திருவள்ளூர் இருந்து திருத்தணி செல்லும் வழி.

Writing By 
DEENADAYALAN.



 

















செவ்வாய், 10 டிசம்பர், 2024

THE TEMPLE TOWER

CULTURAL HERITAGE TOURISM 

அனைவருக்கும் 

எங்கள்CULTURAL HERITAGE TOURISM  வலைப்பதிவு சார்பாக நன்றி கலந்த வணக்கம். 

இந்த   கோயில் வரலாறு வலை பதிவில் நமது தொன்மையான இந்தியாவில் உள்ள அணைத்து கோவில் வரலாறு மற்றும் உருவான கதைகள் மற்றும் பல தகவல்கள் பற்றி பார்க்க இருக்கிறோம்.

கோயில் என பெயர் வர காரணம். ( கோ.. என்றால் இறைவனை குறிக்கிறது. இல் என்றால் இல்லத்தை குறிக்கிறது.)அதாவது கோயில் போல் இல்லம் இருக்க வேண்டும். இல்லம் போல் கோயிலை வணங்க வேண்டும் என்பது இதற்கு பொருள்.

இந்த கோயில்கள் சங்ககாலம் முதல் இன்று வரை பல காலகட்டங்களில் மாற்று பெயர் வைத்துருக்கிறாராகள் ( தேவஸ்தானம். அம்பலம். ஆலயம். தமிழ் இலக்கியங்களில் கோட்டம் என்றும் பெயர் இருக்கிறது. பண்டைய காலமான எகிப்தில் ( ப்ர் ) என்றும் சொல்லப்படும். அதாவது சமயம் சார்ந்த இடத்தையும் புனிதமான கட்டிடங்களை குறிக்கிறது.

சங்க காலம் முதல் இன்றைக்கு இருக்கும் விஞ்ஞானம் காலம் வரை பல வரலாற்று சிறப்புமிக்க இந்து மத கோயில்கள் நம் இந்தியாவில் இருக்கிறது.அந்த கோயில்களுக்கு செல்ல நமக்குத்தான் நேரம் இல்லை. நம் இந்து மத கோயில்கள் தோன்றிய காலம் என்று பார்த்தல் சிலர் வரலாற்று ஆய்வாளர்கள் 6 ஆம் நுற்று ஆண்டு சொல்கிறார்கள் சிலர் அதற்கும் முன் என்றும் சில கோயில்கள் கல்வெட்டுகளில் இதற்கான சான்று இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஆனால் இந்து மத நம் கோயில்கள் ஆல்வர்கள் காலம் மற்றும் வைணவர்கள் காலத்தில் தோன்றப்பட்டி இருக்கலாம் என்று பல நூல்களில் குறிப்பு நமக்கு சொல்கிறது. ஆம் இந்து மதம் கொண்ட கோயில்கள் இரண்டு வழிபாட்டு முறை பின்பற்ற ப்படுகிறது. ஓன்று வைணவம் மற்றுஓன்று சைவ வழிபாடு முறை. சைவர்கள் சிவலாயன்கள் ஆலயங்கள் செல்வார்கள் வைணவர்கள் பெருமாள் ஆலயங்கள் செல்வார்கள்.

இந்து மத கோயில் வழிபாடு என்பது சமஸ்கிரதம் முறையை பின்பற்றி காலம்கலமாக நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது . இதற்கு முன் உதாரணமகா திகழ்வது திருமுலர் திருமந்திரம் எனும் நூல். இந்த நூலில் என்னற்ற இந்து கோயில் வழிபாடு முறையை திருமுலர் நமக்கு சொல்லிவிட்டு சென்று இருக்கிறார்.திருமுலர் தான் எழுதிய நூலில் மிக தெளிவாக சொன்ன அறிவுரை ஒன்பது ஆகமங்களே தந்திரங்கள் என்றும் அதுவே திருமந்திரத்தின் அடையாளம் என்றும் மற்றும் தமிழுக்கான அடையாளம் அதுவே என்றும் மிக தெளிவாக நமக்கு சொல்லிசென்று இருக்கிறார்.

நம் இந்து மத கோயிலில் அடுத்து முக்கியமான பங்கு வகிப்பது 

கோயில் கட்டிடகலை.

பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் தோற்றுப்போகும் அளவிற்கு  வானுவுயர்ந்து நிற்கிறது இந்த கோயில் கோபுரங்கள்.அது மட்டும் அல்லாமல் எத்தனை இயற்கை சிற்றம் வந்தாலும் அசைக்க முடியாத அளவிற்கு கோபுரங்கள் வானுவுயர்ந்து  எப்படி நிற்கிறது என்பது ஆட்சியர்த்தின் உச்சம். அதுவும் இந்த கோயில் கடிட்ட கலை அனைத்தும் மன்னர் ஆட்சி காலத்தில்தான் அதிகமா கடப்பட்டதாக பல ஆராய்ச்சில் தெரிவிக்கப்படுவுள்ளது.மன்னர் ஆட்சி என்பது பாண்டிய. சோழ. சேரன் நாயக்கர் காலங்கள் ஆகியவர்கள் ஆட்சி செய்த காலத்தில்தான் மக்கள் அனைவரும் கோயில் செல்ல வேண்டும் என்றும் இறைவனின் வழிப்பாட்டு தலமாக இருக்க வேண்டும் என்றும் இவர்கள் கட்டியதாக சொல்லப்படுகிறது. இவர்கள் காலம் என்றால் 6 ஆம் நூற்றாரண்டு முதல் 9. ஆம் நூற்றாரண்டு வரை. இதிலும் 6 ஆம் நூற்றாராண்டில் தான் பல கோயில்கள் கட்டியதாக சைவர்கள் மற்றும் ஆழ்வார்கள். நாயன்மர்கள் இவர்கள் வாழ்ந்த காலத்தில்தான் அதிகமான கோயில்கள் கட்டப்படிருக்கலாம் என்றும் கல்வெட்டுக்கள் சில கோயில்களில் காணப்படுகிறது.அதன் பின்னர் மன்னர் ஆட்சி காலங்கள்.


கட்டிகலை 3 பிரிவுகள்.


1. பல்லவர்கள் கட்டிட கலை
2. சோழர் கட்டிட கலை.
3.பாண்டிய மன்னர்.

சைவர்கள் மற்றும் ஆழ்வார்கள். நாயன்மர்கள் காலத்தில் முதலில் செங்கல் மற்றும் மரம் சில உலோகங்களை பயன்படுத்தி கட்டப்பாட்டிர்க்கலாம் என்று சொல்கிறாராகள்.

மன்னர்கள் காலம்.

பல்லவர்கள் கட்டிட கலை என்று பார்த்தல் இவர்கள் கோயில்கலை வெறும் கற்கள் மற்றும் பாறைகளை குடைந்து கட்டியதாக சொல்லப்படுகிறது. அதிலும் இவர்கள் அந்த கற்களை கொண்டே பல கோயில் சிற்பங்களை செதுக்கியதாக சொல்கிறார்கள். இவர்கள் காலம் என்றால் 700 ல் அதாவது அந்த காலகட்டத்தில்  தான் பெரும்பாலான பாறைகள் கோயில் கட்ட வெட்டப்பட்டு குடையப்படாதக்க சொல்லபடுகிறது.

சோழர் காலம்.

இவர்கள் காலம் 850 முதல் 1279. வரை கோயில் கட்டிடகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர்கள்
இவர்கள் கட்டுமானம் பெரிது
பெரிய மண்டபம், பெரிய கோயில் கோபுரங்கள், அர்த்த மண்டபம். கட்டப்படாதக பல கல்வெட்டுக்கள் இவர்கள் கட்டிய கோயில் சுவற்றில் இன்றும் காணலாம்  அந்த குறிப்புகள் அவர்கள் கட்டிய கோயிகளில் கல்வெட்டுக்கள் செதுக்கப்பட்டிறுகிறது.

பாண்டிய மன்னர் காலம்.

இவர்கள் காலம் 1350. முதல்.1560.
இவர்கள் காலத்தில் பெரிய மண்டபம், துண்கள், மிக பெரிய நுழைவு வாயில் ஒரு யானை கோயிலுக்கு உள்ளே வந்து போகும் அளவிற்கு பெரிய நுழைவு வாயில் இவர்கள் கட்டிய கோயில்கள் ஒரு உருக்குள் போவதுபோல் இருக்கும். அதே போல் இவர்கள் கட்டிய கோயில்களில் மிக நூனுக்கமான கர் சிலைகளை பார்க்கலாம் மற்றும் ஒற்றை கல் கோபுரம், ஒற்றை கல் சிலைகள், அதிலும் இவர்கள் செதுக்கிய கல்லில் இருந்து ஒலி எழும் அளவிற்கு கட்டிட கலை இருந்தது.

நாயக்கர் காலம்.


இவர்கள் காலம் 1600 முதல் 1750.

இவர்கள் கட்டிட கோயில்களும் மிக  பெரிய மண்டபம், பெரிய தூண்கள், இவர்களும் பாண்டிய மன்னர்களுக்கு சமகமகா கோயில்களை கட்டி வந்துவுள்ளனர்.

இந்த மன்னர் காலத்தில் கட்டிய அணைத்து கோயில்கள் நம் முடைய மக்கள் மட்டும் தெரிந்து கொள்ளாமல் அடுத்த தலைமுறையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பது அவர்களின் குறிக்கோள். ஆனால் இதில் ஆச்சிரியம் இவர்கள் கட்டிய கோயில்களை நாம் பார்க்கிறோம் கோயிலுளுக்கு இறைவனை வழிபடுகின்றோம் ஆனால் இவர்கள் வாழ்ந்த அரண்மனை, இவர்கள் அணிந்த பொன்கள், ஆடைகள், ஆடம்பரம் வாழ்கை எங்காவது நாம் இன்றைக்கு பார்க்க முடிகிறதா அது தான் நம் உள் எழும் கேள்வி இவர்கள் வாழ்ந்த வரை கடவுளுக்காக மட்டும் தங்கள் வாழ்கையாக வாழ்ந்து வந்து உள்ளனர் நமக்கு தெளிவாக தெரிகிறது. இவர்களை நாம் பின்பற்ற வேண்டாம் அவர்கள் கட்டிய கோயில்களை நாம் பேணி பாதுகாத்தல் போதும் அதற்கு நாம் அந்த அந்த கோயில்களுக்கு சென்று வந்தாலே போதும். இன்றைக்கு நம் இந்து அறநிலைய துறையின் பதிவின்படி சுமார் 36,488 ஆலயங்கள் இருக்கிறது ஆனால் இதில் எத்தனை கோயில்கள் சிறமைப்பு இல்லாமல் இருக்கிறது என்று நமக்கு தெரியாது. ஆதலால் தான் நாம் அனைவரும் கோயில்களுக்கு செல்ல வேண்டும் அப்படியாவது அந்த கோயில்களுக்கு ஓர் வழி பிறக்கும் என்பதே எங்களுவுடைய கோரிக்கை.

நன்றி வணக்கம்.


 உன்றிஸ்வரர் ஆலயம்  திருவள்ளூர்

                                   உன்றிஸ்வரர் ஆலயம்  திருவள்ளூர் .                                   மூலவர் பெயர்  :  ஊன்றீஸ்வரர், ஆதார...