உன்றிஸ்வரர் ஆலயம் திருவள்ளூர்.
மூலவர் பெயர் : ஊன்றீஸ்வரர், ஆதாரதண்டேஸ்வரர்.
உற்சவர் பெயர் : சோமாஸ்கந்தர்.
அம்மன் / தாயார் : மின்னோளி அம்பாள், தடித்கௌரி.
தல விருட்சம் : இலந்தை.
தீர்த்தம் : குசஸ்தலை நதி, கைலாய தீர்த்தம்.
புராண பெயர் : பழம்பதி,திருவெண்பாக்கம்.
ஊர் : பூண்டி.
மாவட்டம் : திருவள்ளூர்.
மாநிலம் : தமிழ்நாடு.
தேவரா பாடல் பெற்ற 276 ஸ்தலகளில் இத்தலம் 250 பாடல் பெற்ற ஸ்தலம்.
தொண்டை நாட்டு பாடல் பெற்ற ( 31 )ஸ்தலகளில் இத்தலம் 17 வது ஸ்தலம்..
தேவாரப்பதிகம்.
பிழையளன பொறுத்திடுவர் என்றடி யேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா கோயிலுளாயே என்ன உழையுடையான் உள்ளிருந்து உளோம்போகீர். என்றானே.
பாடியவர் : சுந்தரர்.
இந்த ஆலயத்தின் வரலாறு பார்ப்பதுக்கு முன் இத்தலத்தின் முக்கியமான பதிவுகளை பார்ப்போம்.ஆம் சிவனை நோக்கி சுந்தரர் பாடி தேவராப் பதிகம் பெற்றக் கோயிலும் இது இல்லை 11 ஆம் நுற்றாண்டில் இரசாராசான் காலத்திய கட்டப்பட்ட கோயிலும் இது இல்லை. சற்று விரிவாக பார்ப்போம் இந்த கோயில் இருந்த இடமானது திருவிளம்பூதூர் எனும் ஊர். இந்த ஊர் குசஸ்தலையாற்றின் கரையறோம் இருந்தது.திருவிளம்பூதூர் என்றால் பத்தி காரண்யம் என்று பொருள் அதாவது ( இலந்தை மரம் சுழ்ந்த காடு )என்ற இடம். இக் கோயிலை 11 ஆம் நுற்றாண்டில் இரசாராசான் காலத்து ஆலயம் என்றும் இந்த ஆலயம் பூண்டி ஏரிக்குள் மூழ்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது . அதாவது அப்போது இருந்த அரசாங்கம் 1942 ல் சென்னையின் குடிநீர் தேவைக்காக நிலம் தேவைப்பட்டது மற்றும் மிக பெரிய அணைக்கட்டவும் முடிவு செய்தது ( பூண்டி அணை ) .மிக பெரிய ஆய்வுக்கு பின் திருவிளம்பூதூர் எனும் இந்த ஊரும் அடங்கிற்று .அப்போதய அறநிலைத்துறை அமைச்சராக இருந்த திரு பக்தவச்சலம் மற்றும் அறநிலை துறை ஆணையர் திரு உத்தண்டராமன் பிள்ளை ஆகியோரின் முயற்சியால் அணைக்கட்டினால் இந்த ஆலயம் மூழ்கிவிடும் என்றும் ஆலயத்தை இங்கிருந்து அகற்றி இப்போது இருக்கும் பூண்டி ஊரின் மைய பகுதியில் வைத்து 05.07.1968 ல் புதிய பூண்டி உண்டிரீஸ்வரர் கோயிலாக கட்டி நிறைவு பெற்றது .அன்றை தினமே இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷகம் செய்யப்பட்டது .இந்த செய்தியை இப்போது இருக்கும் புதிய பூண்டி உண்டிரீஸ்வரர் கோயில் அம்பாள் சன்னதிக்கு எதிர் வாசலில் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது
தல வரலாறு :
திருவள்ளூரில் அமைந்து இருக்கும் இந்த உண்டிரீஸ்வரர் ஆலயத்திற்கு சுந்தரர் தேவார பாடல் பதிகம் பாடியுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று .அப்படிப்பட்ட சுந்தரருக்கும் சிவனுக்கும் நடந்த திருவிளையாடல் தான் இந்த கோயிலின் முழு வரலாறு . சுந்தரர் திருவையாறில் பரவையாரை மணந்து கொண்டு வாழ்ந்து வந்தார் .ஒரு முறை சிவ சேவை செய்வதற்காக திருவொற்றியூர் வந்தார் சுந்தரர் . அப்போது இதே பகுதில் சிவ சேவை செய்து கொண்டு இருந்த சங்கிலியார் பெண் இருந்து வந்தார் . சுந்தரர் சங்கிலியாரை மணந்து கொள்ள ஆசை என்று சொன்னார் சங்கிலியாரும் சுந்தரர் சொன்னதற்கு சம்மதம் தெரிவித்தார் . சுந்தரரும் சிவனை சாட்சியாக வைத்து சங்கிலியாரை மணம் முடித்து அவளை பிரியமாட்டேன் என்று சிவன் முன் சத்தியம் செய்து விட்டு சுந்தரர் சங்கிலியாரை மணந்து கொண்டார் . ஆனால் சுந்தரர் சிவனுக்கு தான் செய்து கொடுத்த சத்தியத்தை மறந்து விட்டு தான் மணந்து கொண்ட சங்கிலியரையும் விட்டு பிரியமாட்டேன் என்ற சத்தியத்தையும் மீறி திருவொற்றியூரில் இருந்து திருவாரூருக்கு நோக்கி செல்ல தொடங்கினர். சிவனுக்கு சுந்தரர் தனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறிவிட்டார் என்றவுடன் கடும் கோபம் வந்தது உடனே சுந்தரர் திருவொற்றியூர் எல்லையை தாண்டும் முன் சுந்தரரின் இரு கண்களையும் சிவன் பறித்து விடுகிறரர். சுந்தரர் தன் இரு கண்களும் பறிபோனதற்கு தான் சிவனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறியததால்தான் என்று உணர்ந்து கொண்டார் . உடனே சிவன் இடம் தான் உங்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறிவிட்டேன் என்று நான் செய்தது தவறு தன்னை மன்னித்து தனக்கு கண் கொடுக்குமாறு சுந்தரர் சிவனிடம் வேண்டுகிறரர் . ஆனால் கோபம் கொண்ட சிவன் தான் உங்களுக்கு கண் கொடுக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார் . சுந்தரர் தன் கண் பறிபோன வருத்தத்தில் திருவொற்றியூரில் இருந்து திருவாரூர் நோக்கி புறப்பட்டு செல்கிறார் .அப்போது செல்லும் வழியில் தட்டுத்தடுமாறி இந்த உண்டிரீஸ்வரர் ஆலயத்திற்கு வருகிறார் மறுபடியும் சிவனிடம் தனக்கு கண் தரும்படி வேண்டுகிறார் ஆனால் சிவன் அமைதியாகவே இருந்தார் .சுந்தரர் பரம்பொருளே எனக்கு கண் தாருங்கள் நான் செய்தது தவறு எனக்கு மன்னிப்பே கிடையாதா என்று மனம் உருகிவேண்டுகிறார் . சிவன் சுந்தரர் நிலை கண்டு சற்று மனம் உருகி அவருக்கு ஒரு ஊன்றுகோலை தருகிறார் . நான் உங்களிடம் கண் கேட்டால் நீங்கள் ஊன்றுகோலை தருகிறீர்கள் இது என்ன சோதனை இந்த ஊன்றுகோலை வைத்து கொண்டு எப்படி நான் செல்வது நீங்கள் இங்கு தான் இருக்கிறீர்கள் என்றால் தனக்கு கண் தரவேண்டும் கோபம் கொள்கிறார் சுந்தரர் . ஆனால் சிவனோ அவருக்கு இறுதிவரை கண் தரவில்லை கோபம் கொண்ட சுந்தரர் சிவன் தனக்கு கொடுத்த ஊன்றுகோலை தூக்கி வீசிவிட்டு காஞ்சிபுரம் நோக்கி தன் யாத்திரை செல்கிறார் சுந்தரர் வீசிய ஊன்றுகோல் அங்கிருந்த நந்தியின் மீது பட்டு நந்தியின் கொம்பு ஒடிந்து விடுகிறது .
சிறப்பம்சம் :
இந்த உன்றிஸ்வரர் கோயிலில் சிவன் கிழக்கு பார்த்த படி சுயம்பு லிங்கமமாக அருள் பாலிக்கிறார் .இங்கே சிவனுக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் மட்டும் சற்று எந்த சிவன் கோயிலிலும் இல்லாமல் வட மாலை சாற்றி வழிபடுகின்றனர் .
பிராத்தனை :
திருமண தடை உள்ளவர்கள் மற்றும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இந்த உன்றிஸ்வரர் கோயிலில் இருக்கும் சிவனுக்கும் அம்பாளுக்கும் தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணதடை மற்றும் கண் பார்வை நிவர்த்தி ஆகும் என்று சொல்லப்படுகிறது .
கோயில் திறக்கும் நேரம் :
காலை . 6.00 முதல் 11.00 வரை
மலை . 4.00 முதல் இரவு 8.00 வரை
முகவரி :
அருள்மிகு உன்றிஸ்வரர் திருக்கோயில் பூண்டி : 602023 .
திருவள்ளூர் மாவட்டம் .
தொண்டை நாடு தேவார பாடல் பெற்ற ஸ்தலங்கள் மொத்தம் 31 கோயில்கள்
( சென்னை . செங்கல்பட்டு . திருவள்ளூர் . காஞ்சிபுரம் . வேலூர் . திருவண்ணாமலை . விழுப்புரம் )
இந்த ஆலயங்களுக்கு நீங்கள் செல்ல விருப்பினால் எங்களை தொடர்பு கொள்ளவும் ; 6383127357