ஆலயத்தின் முகப்பு தோற்றம்
திருப்பாச்சூர் வாசிஸ்வரர் ஆலயம் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துஉள்ளது. 1500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தை அதாவது சுமார் 7 ஆம் நுர்ட்ராண்டில் கரிகாலன் சோழன் மன்னன் கட்டியதாக தேவரா நூல்களில் குறிப்பிப்பட்டுவுள்ளது. அப்பர், சுந்தரர்,சம்பந்தர் ஆகிய மூவராலும் தேவரா பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்.
இங்கு உள்ள மூலவர் பெயர் : வாசிஸ்வரர்
மூலவர்க்கு மற்றோரு பெயர்கள் ( வாசிஸ்வரர், பசுபதீசுவரர், பாசுரர்நாதர் ) என்றும் அழைக்கப்படுகிறார்.
அம்பாள் பெயர் : தங்காதலி .
மற்றோரு பெயர்கள் ( தம் காதலி, பசுபதி நாயகி,மோகனம்பாள்,பனை முலை நாச்சியார்) போன்ற பெயர்களை கொண்டும் திகழ்கிரார்.
தேவாரம் பாடல் :
நாறு கொன்றையும் நாகமும் திங்களும் ஆறும் செஞ்சடை வைத்த அழகானர் காரு கண்டத்தர் கையொதோர்
தேவரா பாடல் பெற்ற 276 ஸ்தலங்களில் இந்த ஆலயம் 249 வது பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்.தொண்டை நாட்டு தேவரா பாடல் பெற்ற ஸ்தலங்களில் இந்த திருப்பாச்சூர் ஆலயம் 16 வது பாடல் பெற்ற ஸ்தலமகா இருக்கிறது.
இந்த ஆலயத்தின்
தீர்த்தம் : சோம தீர்த்தம். மங்கள தீர்த்தம்
ஸ்தல விருட்சம் : வன்னிய மரம். அதாவது மூங்கில் மரம்.
கோயில் அமைந்துள்ள இந்த இடத்திற்கு பல பெயர்கள் உண்டு அதிலும் அம்பாள் பெயர் (தங் காதலி) என்பதால் தங்கதாலிபுரம் என்றும் புராண காலங்களில் மாயாபுரி,மாணிக்கபுரி,அபயபுரம் மற்றும் சோழபுரம் என்றும் அழைக்கப்படுவுள்ளது.
தல வரலாறு.
பல்லாண்டு முன்பு இத்தலம் இருக்கும் இடமானது மூங்கில் மரம் சுழ்ந்த வனமாக இருந்தது. இடையன் பசுகளை அழைத்துக்கொண்டு மெயிச்சலுக்கு சென்றான். அப்போது மேயிச்சலுக்கு வந்த பசுகளில் ஓன்று மட்டும் தனியாக ஒரு மேட்டில் மீது அடிகடி தன் பாலை சுறந்து கொண்டுருந்தது இதை பார்த்த மாடு மெயிக்கும் இடையன் என்ன செய்வது என்று தெரியாமல் ஆட்சிரியரத்துடன் பார்த்தான். அப்போது இந்த இடத்தைஆட்சி செய்த மன்னன் இடம் இதை செயலை தெரிவித்தான்.மன்னன் மறு நாள் தன் காவலர்களை அனுப்பி அந்த இடத்தை ஆய்வு செய்துவிட்டு அந்த தொண்டு மாறு உத்தரவு இட்டான். காவலர்கள் வாசி என்ற கருவியை பயன்படுத்தி அந்த மூங்கில் மரம் நிறைந்த இடத்தை வெட்டினார்கள்.அப்போது பூமிக்கு அடியில் ரத்தம் வெளிப்பட்டது. அங்கே சிவன் சுயம்பு லிங்கமாக இருந்தார்.அதிர்ந்த மன்னன் மற்றும் காவலர்கள் பயந்து போய் அரண்மனைக்கு திரும்பி விட்டான்.
பாம்பை கண்டு மன்னன் பயப்படும் காட்சி இந்த கோயிலின் பின்புறம் உள்ள ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டுவுள்ளது
இந்த செயலை கண்ட மன்னனின் எதிரிகள் மன்னனை கொள்ள ஒரு பானையில் பாம்பு ஒன்றை வைத்து அந்த பானையை பரிசு பொருளாக அரண்மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பானையை திறக்க பார்க்க மன்னன் அங்கு வந்தான் உடனே அங்கு வந்த ஒரு பாம்பாட்டி மன்னனிடம் இருந்து அந்த பானையை திறந்து அதில் இருந்த பாம்பை பிடித்து எந்த ஒரு காரணம் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டார்.
மறுநாள் அதிகாலை வேலையில் மன்னன் அறையில் ஒரு அசிறி ஒலித்தது நானே பாம்பட்டியாக வந்ததும் மற்றும் மூங்கில் காட்டில் நானே சுயம்பு லிங்கமா எழுதுருளியதும் என்று சிவன் உணர்த்தினார்.உடனே மன்னன் இந்த இடத்தில் ஆலயம் ஓன்று எழுப்பினான். வாசி என்ற கருவியால் வெட்டப்பட்ட லிங்கம் என்பதால் இவருக்கு வாசிஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
புராண வரலாறு
படைப்பு கடவுளான பிரம்மா தன் வேத நூல்களை பத்திரமாக ஒரு இடத்தில் வைத்து இருந்தார்.மது கைடபர் என்ற இரு அசுரர்கள் பிரம்மாவிடம் இருந்த அந்த வேத நூலினை கைப்பற்றி கடலுக்கு அடியில் மறைத்து வைத்தவிட்டனர்.தன் படைப்பு தொழிலை செய்ய முடியவில்லை என்று மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார். உடனே மகாவிஷ்ணு மத்ஸ்ய மீன் அவதாரம் எடுத்து இரு அசுரர்களை அழித்து வேத நூல்களை மீட்டு வந்தார். இதனால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்க சிவனை நோக்கி தவம் செய்தார் அப்போது சிவபெருமான் பூலோகத்தில் இந்த ஆலயத்தில் தன்னை வழிபட்டு வந்தால் தோஷம் நீங்க பெறலாம் என்றார். அதன் படி மஹாவிஷ்ணு இத்தலம் வந்து இங்கு உள்ள புனிதநீரில் நிராடி தொடர்ந்து சிவனை வழி பட்டு வர தோஷம் நீங்க பெற்றார்.
ஒரு முறை பார்வதி தேவி தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவன் பெருமான் இடம் சொல்லாமல் சென்றதால் கோபம் கொண்ட ஈசன் பார்வதி தேவியை பூலோகத்தில் சாதாரண பெண்ணாக பிறக்கும் படி சபித்தார் அதன் படி பார்வதி தேவி பூலோகத்தில்
சாதாரண பெண்ணாக பிறந்தார். தான் செய்த தவறை எண்ணி மனம் உருகி சிவனை நினைத்து இந்த திருப்பாச்சூர் தலத்திற்கு வந்து தவம் செய்தால் அப்போது பார்வதி தேவின் தவத்தில் மகிழ்ந்த ஈசன் பார்வதி தேவியை அன்போடு தங் காதலியே என்று அழைத்தார். அதாவது (பிரியமானவேளே ) என்று அர்த்தம். அம்பாள் வந்து தவம் செய்த மட்டும் அல்லாமல் சிவன் பார்வதி தேவியை அழைத்த அதே பெயரால் இந்த இடத்திற்கு
தங் காதலிபுறம் என்று பெயர் வந்தது.
தங் காதலி அம்பாள் சன்னதி
விநாயகர் சபை
புராண காலத்தில் ஒரு முறை சிவ பெருமான் திரிப்புர்ந்தகளை அழிக்க புறப்பட்டு சென்றார் அப்போது முழு முதல் கடவுள் ஆன விநாயகரை வழிபடாமல் சென்றதால் அவர் செல்லும் வழியில் அவர் சென்ற தேர் சக்கரம் முறிந்தது விநாயகர் தம்மை வணங்காமல் சென்றாதனால் என்று உடனே ஒரு விநாயகர் சபை அமைத்து சிவ பெருமானிடம் விசாரணை செய்தார். அந்த நிகழ்வுவின்படி இந்த திருப்பாச்சூர் ஆலயத்தில் 11 விநாயகர்கள் இருக்கும் படி ஒரு விநாயகர் சபை அமைந்துவுள்ளது.இந்த ஏகாதச விநாயகர் வழிபாடு மிகுந்த பலன்அளிக்கக்கூடியது என்று வரலாறு கூறுகிறது.
நமக்கெல்லாம் தெரிந்த திருப்பதி ஏழுமழையான் வெங்கடாசலபதி தன் திருமணத்திற்க்காக குபேரனிடம் கடன் பெற்றரர். அந்த கடனை அடைக்க வெங்கடாசலபதி எவ்வளோ முயற்சிசெய்தார் ஆனால் அவர் பெற்ற கடனை அடைக்க முடியவில்லை. இதற்கு காரணம் என்ன வென்று தெரிந்து கொள்ள சிவபெருமானை வழிபட்டார் அப்போது ஈசன் அவர் முன் தோன்றி திருமணம் முடிந்து எல்லோரும் மணமக்களை 16 ம் பெற்று பேரு வாழ்வு வாழ்க என்று சொல்வார்கள். 16 என்பது 16 வகையனா செல்வங்கள் ( 1.புகழ்.2.கல்வி. 3.வலிமை. 4.வெற்றி. 5.நன் மக்கள். 6.பொன். 7.நெல். 8.நல் விதி. 9.நுகர்ச்சி. 10.அறிவு 11.அழகு. 12.பெருமை. 13.இனிபை. 14.துணிபு . 15.நோயின்மை. 16.நீண்ட ஆயூள்.) இப்படி பட்ட 16 வகை செல்வங்களை நீங்கள் மச்ச அவதாரம் எடுத்து அசுரர்களை அளித்து போது உங்களுக்கு தோஷம் எற்பட்டு இந்த 16 செல்வங்களில் 11 வகை செல்வங்களை நீங்கள் இழந்துவிட்டிர்கள்.நீங்கள் திருப்பாச்சூர் ஆலயம் சென்று அங்குவுள்ள விநாயகர் சபையில் இருக்கும் வலம்புரி விநாயகருக்கு 11 தேங்காய் தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் தொடுக்கப்பட்ட மாலை, அருகம்புல் மாலை மற்றும் 11 நெய் தீபம் ஏற்றி வழிபாட்டால் நீங்கள் இழந்த அந்த 11 வகை செல்வங்கள் திரும்ப கிடைக்கவும் நீங்கள் பெற்ற கடனை அடைப்பதற்கான வழியும் பிறக்கும் என்றார்.அதன் அடிப்படையில் வெங்கடாசலபதி இந்த திருப்பாச்சூர் ஆலயம் வந்து இங்கு உள்ள விநாயகர் சபையில் வழிபாடு மேற்கொண்டு அவர் வாங்கிய கடனை அடைக்க தீர்வும் கண்டராம். மற்றும் அவர் இழந்த 11 செல்வங்களையும் திரும்ப பெற்றார்.அப்படி பட்ட திருப்பதி வெங்கடாசலபதி வந்து வழி பட்ட ஸ்தலம் இந்த திருப்பாச்சூர் ஆலயம். பக்தர்களும் தாங்கள் வாங்கிய கடனை அடைக்க வழி பிறக்க இங்கு வந்து இந்த விநாயகர் சபையில் இருக்கும் வலம்புரி விநாயகரை வழிபட்டால் நிச்சயம் நல்ல பலன் அளிக்கும் என்று சொல்கிறாராகள்.
தாழம்பூ பூஜை.
ஒரு முறை தாழம்பூ சிவன் தலையை கண்டதாக பொய் சொன்னது எதற்காக என்றால் ( பிரம்மனுக்காக ).
அதனால் சிவன் தன் பூஜையில் ஒதுக்கி வைத்துவிட்டார்.தாழம்பூ தன்னை மன்னித்து ஏற்று கொள்ளவேண்டும் என்று பரிகாரம் வேண்டவே சிவன் தாழம்பூ மன்னித்து தன் சிவராத்திரி பூஜை நாளில் மட்டும் பயன்படும்படி வரம் அளித்தார். அதன் அடிப்படையில் சிவராத்திரி நாளில் மட்டும் இக்கோயிலில் தாழம்பூவை சிவன் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர். இந்த நாளில் சிவனை வணகினால் நமக்கு பொய் சொல்லும் குணமும் நம்முடைய ஆணவம் மறையும் சொல்கிறார்கள்.
சொர்ணாகளி.
இந்த ஆலயம் இருக்கும் இடத்தில் முன்பு ஒரு காலத்தில் குறும்பன் என்ற சிற்றரசன் ஆச்சி செய்து வந்தான். அப்போது சோழ மன்னன் ஒருவன் அவன் மீது படைஎடுத்து போறிட்டு அவனிடம் வரியை வாங்க வந்தான்.காளி பக்த ஆன குறும்பன் காளியை ஏவி விட்டு சோழ மன்னன் படைகலை விரட்டி அடித்தான். சோழ மன்னன் போரில் திகைத்து நீற்றான் அப்போது சிவன்னிடம் தனக்கு உதவும் படி தவம் செய்தான் சிவன் அவனுக்கு நந்தியை அனுப்பி காளி இடம் போறிட்டு சோழ மண்ணனுக்கு உதவமாறு உத்தரவு இட்டார்.. அதன் படி பூலோகம் வந்த நந்தி காலியுடன் போறிட்டு வெற்றி பெற்றது. அது மட்டும் இல்லாமல் காளியின் காலில் பொன் சங்கிளி போட்டு கட்டுபடுத்தினார். பின் சோழ மன்னன் இப் பகுதியை கைப்பற்றினான். இன்றும் காளின் காளியில் அந்த பொன் சங்கிலி இருப்பதை நாம் பார்க்கலாம்.இந்த சொர்ணகாளி அம்மனுக்கு பௌர்ணமி தோறும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
நால்வர்கள் உடை சிலை அவர்கள் பாடிய பதிகம் கால்லில் செதுக்கப்பட்டுவுலது.
சப்த கன்னிகள்
தங்கட்சிணாமூர்த்தி
நால்வர்கள் சிலை கோயில் உள்ளே
யானை சிவனுக்கு தண்ணீரில் அபிஷேகம் செய்யும் காட்சி
மஹாகவிஷ்ணு தவம் செய்யும்
காட்சி
அழிந்து வரும் நிலையில் இருக்கும் மண்டபம்
ஆலயம் செல்லும் வழி : திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 3 கி மு மிட்டர்.
திருவள்ளூர் இருந்து திருத்தணி செல்லும் வழி.
Writing By
DEENADAYALAN.