அனைவருக்கும்
எங்கள். CULTURAL HERITAGE TOURISM வலைப்பதிவு சார்பாக நன்றி கலந்த வணக்கம்.
இந்த கோயில் வரலாறு வலை பதிவில் நமது தொன்மையான இந்தியாவில் உள்ள அணைத்து கோவில் வரலாறு மற்றும் உருவான கதைகள் மற்றும் பல தகவல்கள் பற்றி பார்க்க இருக்கிறோம்.
கோயில் என பெயர் வர காரணம். ( கோ.. என்றால் இறைவனை குறிக்கிறது. இல் என்றால் இல்லத்தை குறிக்கிறது.)அதாவது கோயில் போல் இல்லம் இருக்க வேண்டும். இல்லம் போல் கோயிலை வணங்க வேண்டும் என்பது இதற்கு பொருள்.
இந்த கோயில்கள் சங்ககாலம் முதல் இன்று வரை பல காலகட்டங்களில் மாற்று பெயர் வைத்துருக்கிறாராகள் ( தேவஸ்தானம். அம்பலம். ஆலயம். தமிழ் இலக்கியங்களில் கோட்டம் என்றும் பெயர் இருக்கிறது. பண்டைய காலமான எகிப்தில் ( ப்ர் ) என்றும் சொல்லப்படும். அதாவது சமயம் சார்ந்த இடத்தையும் புனிதமான கட்டிடங்களை குறிக்கிறது.
சங்க காலம் முதல் இன்றைக்கு இருக்கும் விஞ்ஞானம் காலம் வரை பல வரலாற்று சிறப்புமிக்க இந்து மத கோயில்கள் நம் இந்தியாவில் இருக்கிறது.அந்த கோயில்களுக்கு செல்ல நமக்குத்தான் நேரம் இல்லை. நம் இந்து மத கோயில்கள் தோன்றிய காலம் என்று பார்த்தல் சிலர் வரலாற்று ஆய்வாளர்கள் 6 ஆம் நுற்று ஆண்டு சொல்கிறார்கள் சிலர் அதற்கும் முன் என்றும் சில கோயில்கள் கல்வெட்டுகளில் இதற்கான சான்று இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஆனால் இந்து மத நம் கோயில்கள் ஆல்வர்கள் காலம் மற்றும் வைணவர்கள் காலத்தில் தோன்றப்பட்டி இருக்கலாம் என்று பல நூல்களில் குறிப்பு நமக்கு சொல்கிறது. ஆம் இந்து மதம் கொண்ட கோயில்கள் இரண்டு வழிபாட்டு முறை பின்பற்ற ப்படுகிறது. ஓன்று வைணவம் மற்றுஓன்று சைவ வழிபாடு முறை. சைவர்கள் சிவலாயன்கள் ஆலயங்கள் செல்வார்கள் வைணவர்கள் பெருமாள் ஆலயங்கள் செல்வார்கள்.
இந்து மத கோயில் வழிபாடு என்பது சமஸ்கிரதம் முறையை பின்பற்றி காலம்கலமாக நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது . இதற்கு முன் உதாரணமகா திகழ்வது திருமுலர் திருமந்திரம் எனும் நூல். இந்த நூலில் என்னற்ற இந்து கோயில் வழிபாடு முறையை திருமுலர் நமக்கு சொல்லிவிட்டு சென்று இருக்கிறார்.திருமுலர் தான் எழுதிய நூலில் மிக தெளிவாக சொன்ன அறிவுரை ஒன்பது ஆகமங்களே தந்திரங்கள் என்றும் அதுவே திருமந்திரத்தின் அடையாளம் என்றும் மற்றும் தமிழுக்கான அடையாளம் அதுவே என்றும் மிக தெளிவாக நமக்கு சொல்லிசென்று இருக்கிறார்.
நம் இந்து மத கோயிலில் அடுத்து முக்கியமான பங்கு வகிப்பது
கோயில் கட்டிடகலை.
பல விஞ்ஞான ஆராய்ச்சிகள் தோற்றுப்போகும் அளவிற்கு வானுவுயர்ந்து நிற்கிறது இந்த கோயில் கோபுரங்கள்.அது மட்டும் அல்லாமல் எத்தனை இயற்கை சிற்றம் வந்தாலும் அசைக்க முடியாத அளவிற்கு கோபுரங்கள் வானுவுயர்ந்து எப்படி நிற்கிறது என்பது ஆட்சியர்த்தின் உச்சம். அதுவும் இந்த கோயில் கடிட்ட கலை அனைத்தும் மன்னர் ஆட்சி காலத்தில்தான் அதிகமா கடப்பட்டதாக பல ஆராய்ச்சில் தெரிவிக்கப்படுவுள்ளது.மன்னர் ஆட்சி என்பது பாண்டிய. சோழ. சேரன் நாயக்கர் காலங்கள் ஆகியவர்கள் ஆட்சி செய்த காலத்தில்தான் மக்கள் அனைவரும் கோயில் செல்ல வேண்டும் என்றும் இறைவனின் வழிப்பாட்டு தலமாக இருக்க வேண்டும் என்றும் இவர்கள் கட்டியதாக சொல்லப்படுகிறது. இவர்கள் காலம் என்றால் 6 ஆம் நூற்றாரண்டு முதல் 9. ஆம் நூற்றாரண்டு வரை. இதிலும் 6 ஆம் நூற்றாராண்டில் தான் பல கோயில்கள் கட்டியதாக சைவர்கள் மற்றும் ஆழ்வார்கள். நாயன்மர்கள் இவர்கள் வாழ்ந்த காலத்தில்தான் அதிகமான கோயில்கள் கட்டப்படிருக்கலாம் என்றும் கல்வெட்டுக்கள் சில கோயில்களில் காணப்படுகிறது.அதன் பின்னர் மன்னர் ஆட்சி காலங்கள்.
கட்டிகலை 3 பிரிவுகள்.
1. பல்லவர்கள் கட்டிட கலை
2. சோழர் கட்டிட கலை.
3.பாண்டிய மன்னர்.
சைவர்கள் மற்றும் ஆழ்வார்கள். நாயன்மர்கள் காலத்தில் முதலில் செங்கல் மற்றும் மரம் சில உலோகங்களை பயன்படுத்தி கட்டப்பாட்டிர்க்கலாம் என்று சொல்கிறாராகள்.
மன்னர்கள் காலம்.
பல்லவர்கள் கட்டிட கலை என்று பார்த்தல் இவர்கள் கோயில்கலை வெறும் கற்கள் மற்றும் பாறைகளை குடைந்து கட்டியதாக சொல்லப்படுகிறது. அதிலும் இவர்கள் அந்த கற்களை கொண்டே பல கோயில் சிற்பங்களை செதுக்கியதாக சொல்கிறார்கள். இவர்கள் காலம் என்றால் 700 ல் அதாவது அந்த காலகட்டத்தில் தான் பெரும்பாலான பாறைகள் கோயில் கட்ட வெட்டப்பட்டு குடையப்படாதக்க சொல்லபடுகிறது.
சோழர் காலம்.
இவர்கள் காலம் 850 முதல் 1279. வரை கோயில் கட்டிடகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர்கள்
இவர்கள் கட்டுமானம் பெரிது
பெரிய மண்டபம், பெரிய கோயில் கோபுரங்கள், அர்த்த மண்டபம். கட்டப்படாதக பல கல்வெட்டுக்கள் இவர்கள் கட்டிய கோயில் சுவற்றில் இன்றும் காணலாம் அந்த குறிப்புகள் அவர்கள் கட்டிய கோயிகளில் கல்வெட்டுக்கள் செதுக்கப்பட்டிறுகிறது.
பாண்டிய மன்னர் காலம்.
இவர்கள் காலம் 1350. முதல்.1560.
இவர்கள் காலத்தில் பெரிய மண்டபம், துண்கள், மிக பெரிய நுழைவு வாயில் ஒரு யானை கோயிலுக்கு உள்ளே வந்து போகும் அளவிற்கு பெரிய நுழைவு வாயில் இவர்கள் கட்டிய கோயில்கள் ஒரு உருக்குள் போவதுபோல் இருக்கும். அதே போல் இவர்கள் கட்டிய கோயில்களில் மிக நூனுக்கமான கர் சிலைகளை பார்க்கலாம் மற்றும் ஒற்றை கல் கோபுரம், ஒற்றை கல் சிலைகள், அதிலும் இவர்கள் செதுக்கிய கல்லில் இருந்து ஒலி எழும் அளவிற்கு கட்டிட கலை இருந்தது.
நாயக்கர் காலம்.
இவர்கள் காலம் 1600 முதல் 1750.
இவர்கள் கட்டிட கோயில்களும் மிக பெரிய மண்டபம், பெரிய தூண்கள், இவர்களும் பாண்டிய மன்னர்களுக்கு சமகமகா கோயில்களை கட்டி வந்துவுள்ளனர்.
இந்த மன்னர் காலத்தில் கட்டிய அணைத்து கோயில்கள் நம் முடைய மக்கள் மட்டும் தெரிந்து கொள்ளாமல் அடுத்த தலைமுறையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பது அவர்களின் குறிக்கோள். ஆனால் இதில் ஆச்சிரியம் இவர்கள் கட்டிய கோயில்களை நாம் பார்க்கிறோம் கோயிலுளுக்கு இறைவனை வழிபடுகின்றோம் ஆனால் இவர்கள் வாழ்ந்த அரண்மனை, இவர்கள் அணிந்த பொன்கள், ஆடைகள், ஆடம்பரம் வாழ்கை எங்காவது நாம் இன்றைக்கு பார்க்க முடிகிறதா அது தான் நம் உள் எழும் கேள்வி இவர்கள் வாழ்ந்த வரை கடவுளுக்காக மட்டும் தங்கள் வாழ்கையாக வாழ்ந்து வந்து உள்ளனர் நமக்கு தெளிவாக தெரிகிறது. இவர்களை நாம் பின்பற்ற வேண்டாம் அவர்கள் கட்டிய கோயில்களை நாம் பேணி பாதுகாத்தல் போதும் அதற்கு நாம் அந்த அந்த கோயில்களுக்கு சென்று வந்தாலே போதும். இன்றைக்கு நம் இந்து அறநிலைய துறையின் பதிவின்படி சுமார் 36,488 ஆலயங்கள் இருக்கிறது ஆனால் இதில் எத்தனை கோயில்கள் சிறமைப்பு இல்லாமல் இருக்கிறது என்று நமக்கு தெரியாது. ஆதலால் தான் நாம் அனைவரும் கோயில்களுக்கு செல்ல வேண்டும் அப்படியாவது அந்த கோயில்களுக்கு ஓர் வழி பிறக்கும் என்பதே எங்களுவுடைய கோரிக்கை.
நன்றி வணக்கம்.